கோலிவுட் சினிமா உலகில் சமீப காலமாகவே பிரபல நட்சத்திரங்கள் விவாகரத்து செய்து வருகின்றனர் இதுபோன்ற நடவடிக்கை ரசிகர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரமான ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஜெயம் திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இவரின் முதல் திரைப்படமே அவர் பெயரின் அடையாளமாக ரசிகர்கள் மாற்றினர். ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக சமீபத்தில் செய்தியை வெளியிட்டார். இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இவர்களது விவாகரத்து செய்தி பேசு பொருளாகியது.
ஜெயம் ரவி அளித்த பேட்டியில் சினிமா குறித்து எந்த கேள்வி வேண்டுமானாலும் ரசிகர்கள் கேட்கலாம் ஆனால் சொந்த வாழ்க்கையை பற்றி கேள்விகள் கேட்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து வழக்கு தொடரப்பட்டது. இருவரையும் விசாரித்த நீதிபதி கடந்த சில நாட்களுக்கு அன்பு ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் மனமிட்டு பேசுவதற்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியிருந்தது. நீதிமன்றத்தின் அறிவுரையின்படி இருவரும் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் சமரச பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிவடைந்தது.
இதை தொடர்ந்து குடும்ப நல நீதிமன்றம் வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி மீண்டும் சமரச பேச்சுவார்த்தை தொடரும் என்றும் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இருவரும் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.