தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட விருதுகள் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் சிறந்த நடிகைக்கான விருதை 36 வயதினிலே படத்திற்காக நடிகை ஜோதிகா வென்றுள்ளார்.
ரோசன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவான 36 வயதினிலே திரைப்படம் 2டி எண்டர்டெய்ன்மண்ட் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ நாராயணன் இசையில் உருவான இந்த திரைப்படம் ஒரு நடுத்தர பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து வலிகளையும், ஆசைகளையும் உணர்வு பூர்வமாக இப்படத்தில் கொண்டுவரப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் உணர்வு பூர்வமான நடிப்பால் நடிகை ஜோதிகா இப்படத்தில் ரசிகர்கள் மனதை வென்றுள்ளார்.
மேலும் இன்று முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்று வரும் இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் 36 வயதினிலே படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ஜோதிகாவிற்கு வழங்கினார். செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஜோதிகா 36 வயதினிலே திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அதற்காக விருது பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.