நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10 திரைக்கு வந்தது ஜெயிலர் படம். இந்த ஜெயிலர் படம் ரஜினியின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான விருந்தாக அமைந்துள்ளது. ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ஜெயிலர் படம் மாபெரும் வசூலை பெற்றுள்ளது.
ஜெயிலர் படம் தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட பல மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூலை குவித்துள்ளது. ரஜினிக்கு ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரைப்படங்களில் மாபெரும் வசூலை குவித்த திரைப்படங்களில் ஜெயிலர் படமும் இடம்பெற்றுள்ளது. ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஜெயிலரின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் ரஜினிகாந்துக்கு விலை உயர்ந்த பரிசை வழங்குவார் என்று சில நாட்களுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கலாநிதி மாறன் விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் சார்பில் வெளியிட்ட வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு BMW கார் இரண்டு காண்பிக்கப் பட்டதாகவும் அதில் ரஜினிகாந்த் ஒரு காரை தேர்வு செய்து கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்த BMW காரை கலாநிதிமாறன் பரிசாக வழங்கியுள்ளார். கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்துக்கு பரிசாக வழங்கிய BMW X7 காரின் விலை சுமார் ஒன்றரை கோடி என்பது குறிப்பிடத்தக்கது.