சிறுத்தை சிவா இயக்கத்தின் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் கங்குவா திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். மேலும் இத்திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாக்கப்பட்டது. திரைப்படம் வெளிவந்தது முதல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களுடன் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இத்திரைப்படம் குறித்து நடிகை ஜோதிகா பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் இத் திரைப்படத்தை குறித்து எதிர்மறையான விமர்சனங்களை திட்டமிட்டு பதிவு செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். கங்குவா திரைப்படம் வெளிவந்த 4 நாட்களில் உலக அளவில் இதுவரை ரூ. 90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் வரும் நாட்களில் ரூ. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.