சின்னத்திரையில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ள நடிகர் கவின் தற்பொழுது வெள்ளி திரையில் ஒரு சில படங்கள் நடித்துள்ள நிலையில் டாடா படம் இவருக்கு பெரும் வெற்றி வாய்ப்பை தேடி தந்துள்ளது. டாடா படத்தை தொடர்ந்து நடிகர் கவினுக்கு ரசிகர் பட்டாலும் குவிந்துள்ள நிலையில் தற்பொழுது பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது.
வருகின்ற மே 10 ஆம் தேதி நடிகர் கவின் நடித்துள்ள படம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து நடிகர் கவின் மேலும் இரு படங்களில் நடித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கவின் நடிக்கும் ஐந்தாவது திரைப்படம் முடிவடைந்து திரைக்கு வர உள்ள நிலையில் அவரது ஆறாவது திரைப்படத்திற்காக பிசியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் கவின் வெற்றிமாறன் தயாரிப்பு மற்றும் விக்ரனன் அசோக் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் வெளியாகி உள்ளது. இதுவே கவின் மற்றும் ஆண்ட்ரியா இணையும் முதல் திரைப்படம் ஆகும்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பதாகவும். செய்தி வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் நாட்களில் இப்படத்திற்கான தலைப்பு மற்றும் பிற செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.