Home சினிமா சரவணன் மீனாட்சி நடிகர் கவினுக்கு திருமணம் – ரசிகர்களுக்கு வந்த சூப்பர் தகவல்…! 

சரவணன் மீனாட்சி நடிகர் கவினுக்கு திருமணம் – ரசிகர்களுக்கு வந்த சூப்பர் தகவல்…! 

by Pramila
0 comment

நடிகர் கவின் தற்போது தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவருக்கு வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம்  ஆனவர்.

அதற்கு முன்னதாக 2011ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க தொடங்கிய இவர்.அடுத்ததாக தாயுமானவன் என்ற தொடரில் நடித்தார்,பிறகு அனைவரும் விரும்பும் வகையில் சரவணன் மீனாட்சி என சீரியல்களில் நடித்து வந்தார்.பிறகு சில படங்களில் பீட்சா மற்றும் இன்று நேற்று நாளை திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்து வந்தார்.

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் பெற்றவர்.அந்த ஷோவில் லாஸ்லியாவை காதலித்து வந்தார்.பிக் போஸ் முடிந்து வெளியே வந்த உடன் இவர்களது காதல் தொடருமா என்று பலரும் சிந்தித்தனர்.அதேபோல் முடிந்து வெளியே வந்தவுடன் இருவரும் நீ யாரோ நான் யாரோ என்ற மாதிரி சென்று விட்டனர்.

இந்த நிலையில் கவின் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணை மணக்க அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். திருமணம் விரைவில் அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி நடக்கவிருப்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign