சமூக வலைத்தளங்களில் தற்போது இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றிய தகவல் பரவி வருகிறது . இதற்கு கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார் . இந்த நிலையில் தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் . சில மாதங்களுக்கு முன்பு கேரளா அரசியல் தலைவர் ஒருவரின் மகனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது . அதை கீர்த்தி சுரேஷ் மறுத்தார் . அதன் பிறகு தற்போது மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது .
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்ராக வளம் வருபவர் அனிருத் . கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் , அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர் . இதற்கு கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். நானும் அனிருத்தும் நல்ல நண்பர்கள் என்றும் , திருமணம் தொடர்பாக பரவும் தகவல் தவறானது , அனிருத் எனக்கு நல்ல நண்பன் என்று கூறியுள்ளார் . மேலும் திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது , திருமணம் நடக்கும் என்று பதில் அளித்தார் ….