மலையாளத் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2015 – ஆம் ஆண்டு மாயம் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் தமிழ் சினிமாவில் ரஜினி முருகன், பைரவா, மகாநதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வெற்றிகளை குவித்து தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார்.
சமீப காலமாகவே கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்ற செய்தி பரவி வந்த நிலையில் அதற்கான விளக்கங்களும் அடிக்கடி கொடுத்துள்ளார். இருந்தபோதிலும் கீர்த்தி சுரேஷ் அவரது காதலை பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
இதை தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 11 – ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் என்று செய்தி வெளியாகி உள்ளது. அவரது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் விரைவில் அவர் யார் என்ற செய்தியை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்ச்சியில் மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது.