Home சினிமா சென்னையில் விதிகளை மீறும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு போலீசார் …!

சென்னையில் விதிகளை மீறும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு போலீசார் …!

by Pramila
0 comment

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் நடிகர் விஜய் . தற்போது இவர் நடித்து வெளிவர இருக்கும் படம் “லியோ” .  திரைப்படத்தை  திரையிடுவது தொடர்பாக ஏதேனும் விதிகளை மீறும் திரையரங்குகளை கண்காணிப்பதற்க்காக சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அறிவித்துள்ளார் .
லியோ படத்தை வெளியிடுவதற்கு ஆரசு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது . அந்த விதிகளின் படி வருகின்ற 19.10.2023 முதல் 24.10.2023 வரை திரையரங்குகளில் சிறப்புக் காட்சி உட்பட தினசரி ஐந்து காட்சிகள் லியோ திரைப்படத்தை திரையிடலாம்   என்றும்  காலை 9 மணிக்கு துவங்கி அதிகாலை 1.30 மணிக்குள் 5 காட்சிகளையும் முடிக்க வேண்டும் .  மேலும் லியோ திரைப்படத்தை திரையிடும்  திரையரங்குகளின் உரிமையாளர்கள்  பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ,  வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடு செய்திருக்க வேண்டும் .  அதுமட்டுமின்றி திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது, என்று  கட்டுப்பாடுகள் அரசு ஆணை  வெளியிட்டுள்ளது  இதை  கண்காணிப்பதற்காக சிறப்பு  போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர் ஆளர்களும் கண்காணிக்க வேண்டும் எனவும் அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign