மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் உருவான படம் மாவீரன், இந்த படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியிடப்பட்டது. மாவீரன் திரைப்படத்தில் மிஸ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவரது குரல் மூலம் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு வித்தியாசமான கதைக்களமாக மாவீரன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாவீரன் திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல ஒரு இடத்தை பிடித்துள்ளது என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து மாவீரன் படம் வெளிவந்து ஆறு நாட்கள் ஆகி உள்ளது இதுவரை உலக அளவில் ரூ. 57 கோடியை கடந்து பட்டையை கிளப்பி வருகிறது.
மாவீரன் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ.25 கோடி கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில நாட்களில் மாவீரன் படம் மாபெரும் வசூலை பெரும் என்று மாவீரன் பட குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.