தமிழ் சினிமாவை உச்ச நட்சத்திரமாகவும் பிரபலமான நட்சத்திரமாகும் இருப்பவர் நடிகை நயன்தாரா. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தமிழ் மொழி மற்றும் பிற மொழிகளிலும் நடிகை நயன்தாரா பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். தற்பொழுது டெஸ்ட், மண்ணாங்கட்டி, ராக்காயி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
டெஸ்ட் திரைப்படம் இயக்குனர் சசிகாந்த் இயக்கத்தின் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் முழுவதும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட போவதாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் சசிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் டெஸ்ட் திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என்று சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் டெஸ்ட் திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படாமல் நேரடியாக நெட்பிளிக் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை தான் நயன்தாரா நாளை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.