நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்தை சினிமா உலகில் இருந்து மிக முக்கியமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில் இவர்களின் திருமண வீடியோ வெளியிடப்படாமல் இருந்தது. தற்பொழுது நெட்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்ற செய்தி தற்பொழுது பரவி வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக இவர்களின் திருமண வீடியோ வெளியிடப்படாத நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமண வீடியோ 1. 21 மணி நேர கால அளவு கொண்டதாகவும் நயன்தாரா பியான்ட் த பேரி டேல்’ என்ற தலைப்பில் வெளியாக இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருமண வீடியோவில் திருமணத்தில் கலந்து கொண்டுள்ள முக்கிய பிரபலங்கள் மற்றும் வாழ்த்து செய்தி என அனைத்தும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.