புஷ்பா 2 படம் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது .
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர் புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக உலகம் முழுவதும் வெளிவந்த நிலையில் அதிக கூட்ட நெரிசல் இருந்து வந்தது. புஷ்பா 2 படத்தினை அதிகாலை சிறப்பு காட்சியை காண ஹைதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு சென்ற ரேவதி என்கின்ற பெண் கூட்ட நெரிசலின் காரணமாக கூட்டத்தில் சிக்கி பலியானார்.
இந்த உயிரிழப்பானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தியேட்டரில் உரிமையாளர், மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த சூழ்நிலையில் இனி எந்த திரைப்படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று தெலுங்கானா அரசு தடை செய்தது.
இதேபோன்று மற்றொரு சம்பவமும் இப்போது அரங்கேறியுள்ளது. இது ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் புஷ்பா 2 படம் பார்த்துக் கொண்டிருந்த 40 வயது நபர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளதது. திரையரங்கில் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டும் படத்தை இயக்கி கொண்டே இருந்ததால் திரையரங்கில் இருந்தவர்கள் அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து வந்த போலீசார் திரைப்படத்தை தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படம் பார்த்துக் கொண்டிருந்தவர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.