தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இருவரின் கூட்டணியில் புதிய படம் முதன் முதலாக மனோஜ் தயாரிப்பில் உருவாக உள்ளது. இந்த மெகா கூட்டணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய படத்தில் நடனம், இசை, பாடல் நகைச்சுவை என அனைத்தும் சிறப்பான முறையில் அமையப்படும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நகைச்சுவை நடிகராக யோகி பாபு வித்தியாசமான கதாபாத்திரத்தை நடிக்க இருப்பதாகவும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் அஜ்ஜூ வர்கீன் மற்றும் அர்ஜுன் அசோகன் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பெயரிடப்படாத இந்த புதிய திரைப்படம் இன்னும் சில மாதங்களில் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று இந்த புதிய கூட்டணி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் ஏ.ஆர். ரகுமான் மற்றும் பிரபுதேவா இணையும் 6 – வது கூட்டணியாகவும் இதற்கு தற்பொழுது arrpd – 6 என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் தற்பொழுது வெளியாக்கிய தகவலின் படி இப்படத்திற்கான படப்பிடிப்புகள் வருகின்ற மே மாதம் தொடங்க இருப்பதாகவும் 2025 இப்படம் வெளியிடப்படும் என்றும் தற்பொழுது அறிவிப்பு வெளியாகி உள்ளது.