இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் , நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் பகத் பாஸில் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த வருடம் 2024 – ஆம் ஆண்டு அதிக வசூல் சாதனை படைத்துள்ள படமாக புஷ்பா 2 உருவெடுத்துள்ளது. நீண்ட நாட்கள் எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு கடந்த வாரம் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தற்பொழுது 10 நாட்களாக அதிரடியான வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனிடையே இந்த 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 1200 கோடியை எட்டி இந்திய சினிமாவில் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இதுவரை அல்லு அர்ஜுன் நடித்த திரைப்படத்தில் புஷ்பா 2 திரைப்படம் தான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வசூலை குவித்துள்ளது. வருகின்ற நாட்களில் ரூ. 1500 கோடியை எட்டும் என்றும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புஷ்பா 1 திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. புஷ்பா 1 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 390 கோடியை வசூல் செய்து அசத்தியது. ஆனால் புஷ்பா 2 திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்று 10 நாட்களில் மட்டும் ரூ. 1200 கோடியை எட்டி உள்ளது. இந்த வசூல் வேட்டை படக்குழுவினருக்கு வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது.