நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் அகில இந்திய அளவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது. மேலும் தற்பொழுது புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஒரு வருடமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. திரைப்படத்தில் முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். நடிகர் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். புஷ்பா 2 திரைப்படத்தில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தற்பொழுது ரூ. 1000 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படம் அனைத்து மொழிகளிலும் திரையரங்கில் வெளியிடப்படும் என்றும் திரையரங்க வெளியீட்டு உரிமை 660 கோடி தற்பொழுது வரை பசுலாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் நெட்லிக்ஸ் நிறுவனமானது 275 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாகவும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர். வருகின்ற டிசம்பர் ஆறாம் தேதி புஷ்பா 2 திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படும் என்றும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.