தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் முன்னிட்டு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் நடிகர் விஜய், ரஜினிகாந்த் தொடர்ந்து இவருக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம். ஆண்டுதோறும் இவரது பிறந்த நாளில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டாடும் பழக்கம் கொண்டவர்.
கடந்த ஆண்டு அவரது பிறந்தநாள் அன்று புகைப்படம் எடுக்க வந்த ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அடைந்த ராகவா லாரன்ஸ் – க்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்பொழுது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதை எனது பிறந்தநாள் அன்று என்னை சந்திக்க வந்த என் ரசிகர் ஒருவர் இறந்துள்ளது. மிகவும் வேதனை அடைய செய்தது. இதனால் என் ரசிகர்களுக்காக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளேன் என்றும் என் பிறந்தநாள் அன்று இன்று ரசிகர்கள் இருக்கும். ஊருக்கே சென்று போட்டோ ஷூட் எடுக்க உள்ளதாகவும் அந்த பதிவில் கூறியிருந்தார்.
நாளை முதல் ரசிகர்களை சந்தித்து போட்டோ சூட் எடுக்க இருக்கும் ராகவா லாரன்ஸ் முதலாவதாக விழுப்புரம் லோகலட்சுமி மஹாலில் நடைபெற இருப்பதாக ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.