தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகரின் ரோபோ சங்கரும் ஒருவர் கலக்க போவது யாரு மெமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக அறிமுகம் ஆனவர் ரோபோ சங்கர்.மேலும் காமெடி நடிகராக முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார்.திடீரென்று உடல் எடை குறைந்தது சினிமா வட்டாரம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சி அடைந்த மக்களுக்கு அவரது குடும்பத்தினர் அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். என்ன காரணத்தினால் இவர் உடல் எடையை மிகவும் குறைந்தது என்று இதுவரை தெரியவில்லை ஆனால் சில காரணங்களினால் உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறேன் என்று ரோபோ சங்கர் பதிவை வெளியிட்டுள்ளார்.