நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இன்று 50ஆவது பிறந்தநாள் இதில் தொடர்ந்து திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதைஇந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் நடிகர் விஜய்க்கு உணவு பூர்வமானம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தில் என் அன்பு தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தொடங்கியுள்ளார். சாமானிய மக்கள் வாழ்க்கையில் சரித்திரத்தை மாற்ற அரசியலில் அடியெடுத்து வைத்து மக்கள் பணியை சிறப்பாக செயல்படுத்த வாழ்த்துக்கள் என்றும் என் உயிர் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவரது எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்