சூரி என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார்.
நகைச்சுவை நடிகராக சினிமா துறையின் மூலம் அறிமுகமான சூரி தற்போது கதாநாயகனாகவும் உருவெடுத்திருக்கிறார்.
விடுதலை-1 ல் கதாநாயகனாக நடித்த சூரி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை கண்டுகளிக்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். தற்போது விடுதலை இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது. விடுதலை இரண்டாம் பாகத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
விடுதலை 2 படத்தில் சூரியுடன் சேர்ந்து வாத்தியாராக விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன், கௌதம் மேனன், ராஜு மேனன், இளவரசு தமிழ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
இப்படப்பிடிப்பிற்கு சூரி சம்பளமாக 8 கோடி வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.