தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா சமீப காலமாகவே பல சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார். பாடகி சுசித்ரா சுசி லீக்ஸ் மூலமாக திரை உலகில் பிரபலமானார். சுசித்ரா அவரது முன்னாள் கணவர் கார்த்தியை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
சுசித்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் மானநஷ்ட ஈடு வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்துள்ளார். இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதி நடிகர் கார்த்திக் பற்றி எந்த கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என்று பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.