தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து . “ஜெய் பீம்” பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் . அவர்களது 170வது படத்தில் நடிக்கிறார் . இப்படத்தை அனிரூத் இசையமைக்க , லைகா புரொடேக்சன்ஸ் தயாரிக்கிறது . மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர்களை அறிவித்தார்கள் . இதில் தமிழ் நடிகர்களுடன் ஹிந்தி , தெலுங்கு , மலையாளம் என பல மொழி நடிகர்கள் நடிக்கவுள்ளனர் .
மேலும் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக தயாரிப்பு தரப்பில் இருந்து , நடிகர் ரஜினியின் புதிய தோற்றத்துடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது . இப்படம் முதற்கட்டமாக திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது . இப்படம் நல்ல கருத்துக்கள் மற்றும் கமர்ஷியல் படமாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார் .