நடிகை வனிதா விஜயகுமார் இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் தற்பொழுது சின்ன திரையில் பங்கேற்று வருகிறார். மேலும் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களாக பங்கேற்று பிரபலமானார்.
இவர் மட்டும் இன்றி இவரது மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் ஏழாவது சீசனில் பங்கேற்று பிரபலமானார். இதைத் தொடர்ந்து நடிகை வனிதா விஜயகுமார் தற்பொழுது புதிய தொழில்கள் தொடங்கி பிஸியாக இருந்து வருகிறார்.
சமீப காலமாகவே இவர் பல வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான பிரச்சினை குறித்து பேசி வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
வனிதா விஜயகுமார் இதுவரை மூன்று திருமணங்கள் செய்துள்ளார். மூன்று திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்தது தற்பொழுது நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்து வருவதாக சில தகவல்கள் கசிந்தது. இந்த நிலையில் தற்பொழுது அக்டோபர் ஐந்தாம் தேதி நடிகை வனிதா விஜயகுமார் நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டர் கரங்களைப் பிடித்து காதலை வெளிப்படுத்துவது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பகிரப்பட்டு இருவருக்கும் திருமணமா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.