தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், உச்ச நட்சத்திரமாகவும் வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்பொழுது இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தை வெளிவந்த திரைப்படம் தான் வேட்டையன். இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த படி படமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததால் தற்பொழுது ரசிகர்கள் வேட்டையன் திரைப்படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர் ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக வேட்டையன் திரைப்படம் அமைந்துள்ளது. ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் TJ ஞானவேல். ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது வேட்டையன் திரைப்படத்திலும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் வேட்டையன் திரைப்படத்தை கொண்டாடி வரும் நிலையில் முதல் நாள் வசூல் ஆனது உலக அளவில் ரூ. 72 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூல் ஆனது ரூ. 20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இனிவரும் நாட்களில் மாபெரும் வசூலை பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.