விடுதலை-1 ல் கதாநாயகனாக நடித்த சூரி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார் அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை கண்டுகளிக்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். தற்போது விடுதலை இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது விடுதலை இரண்டாம் பாகத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.விடுதலை 2 படத்தில் சூரி,வாத்தியாராக விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ,கென் கருணாஸ், சேத்தன், கௌதம் மேனன், ராஜு மேனன், இளவரசு, தமிழ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
முதல் பாகத்தை சூரி எவ்வளவு அழகாக எடுத்துச் சென்றாரோ அதேபோலவே இரண்டாம் பாகத்தை முழுமையாக விஜய் சேதுபதி பற்றிப் பிடித்துக் கொண்டார்.விஜய் சேதுபதி வாத்தியாராக நடித்து அனைவராலும் ஈர்க்கப்பட்டார்.
விடுதலை 2 படமானது உலக அளவில் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் பேட்டை செய்துள்ளது என்று பார்ப்போம்
விடுதலை 2 படமானது முதல் நாளே 7 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் மூன்று நாட்களில் 23 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.