விக்னேஷ் சிவன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். அவர் தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார் , பல்வேறு விதமான திரைப்படங்களை உருவாக்கினார்.
தமிழ்சினிமாவில் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.
முன்னணி நடிகையான நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் படங்கள் தயாரிப்பது மட்டுமல்லாமல் திரைப்படம் பணிகளை தாண்டி வேறு சில பிஸ்னஸ்களும் செய்து வருகிறார்கள். லிப்பாம் , நாப்கின்கள் போன்றவற்றில் முதலீடு செய்ததோடு, 9ஸ்கின் என்ற பெயரில் அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து விக்னேஷ் அவன் ஒருமுறை புதுச்சேரிக்கு சென்ற போது புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து ஹோட்டல் தொழில் செய்ய இருப்பதாக பேசியதாக தகவல் வெளிவந்தது. அப்போது புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயங்கி வரும் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சீக்கஸ் ஹோட்டலை விலை பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
சீக்கஸ் ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலை பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் அது அரசு ஹோட்டல் அதை விற்க இயலாது என கூறியுள்ளார் அப்படியானால் சீகல்ஸ் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கிடைக்குமா என்றும் விக்னேஷ் சிவன் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயங்கி வரும் சீகல்ஸ் ஹோட்டல் இதில் அதிக ஊழியர்கள் பணி புரிகின்றனர் அதனை ஒப்பந்த அடிப்படையில் கூட வாங்க முடியாது என்று அமைச்சர் மறுத்ததாக தகவல் வெளிவந்துள்ளது
அதைத்தொடர்ந்து தனியார் வசம் உள்ள பகுதிகள் ஏதேனும் ஒன்றாவது கிடைக்குமா எனவும் விக்னேஷ் சிவன் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியானது.
புதுச்சேரி கடற்கரை கடந்த 2017 ஆம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு ஏலத்தின் அடிப்படையில் தனியார் வசமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் எதுவும் செய்ய முடியாத என அமைச்சர் விக்னேஷ் சிவனிடம் விளக்கியுள்ளார்.
அமைச்சர் விக்னேஷ் சிவனிடம் நிகழ்ச்சிகள் எதுவும் நீங்கள் நடத்த விருப்பப்பட்டால் அதற்குரிய கட்டணம் முன்பாகவே செலுத்தி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் விளக்கம் அளித்ததுள்ளார். அதற்குப் பிறகு துறைமுக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிறகு விக்னேஷ் சிவன் அங்கிருந்து புறப்பட்டார்.