சின்னத்திரையில் தன் நகைச்சுவையால் கால் பதித்த நடிகர் பாலா விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மனதை வென்றார். இவரின் நகைச்சுவை திறமைக்கு ஏராள ரசிகர்கள் உள்ளனர். தற்பொழுது திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பாலா நடித்து வருகிறார். இது அவரின் வெற்றிக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.
நடிகர் பாலா நடிப்பது மட்டுமல்லாமல் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார். முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம், குழந்தைகளின் கல்வி என எண்ணற்ற வகையில் நடிகர் பாலா உதவி செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் பாலா ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்றி ஊராட்சியில் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்த கிராமத்திற்கு வழங்கினார். இது மட்டும் இன்றி மிக்சாங் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, பணம் என எண்ணற்ற உதவிகளை செய்தார்.
இதை தொடர்ந்து தற்பொழுது மருத்துவ சேவைக்காக இலவச ஆம்புலன்ஸை வழங்கி உள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இதுகுறித்து நடிகர் பாலா பேசிய போது கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த ஆட்டோ இலவசமாக செயல்படும். என்றும் மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு இந்த ஆட்டோ உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலவச ஆட்டோவானது காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்றும் பல்லாவரம், பம்மல், அனகாபுதூர் போன்ற இடங்களில் உள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கும் உதவ தயாராக உள்ளேன் என்றும் ஆட்டோ ஓட்டுனரின் சம்பளம் மற்றும் பெட்ரோல் எனது செலவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.