நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்பொழுது சினிமா மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் அடி எடுத்து வைத்துள்ளார். இதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாகவும் யோகி பாபு, அஜ்மல் அமீர், சினேகா பிரசாந்த் உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாகவும் நடிகர் விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க போவதாகவும் அதில் ஒரு வேடம் நடிகராகவும் மற்றொருவரிடம் வில்லன் ஆகவும் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிக பிரம்மாண்ட முறையில் தயாரித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்பொழுது இப்படத்தில் விஜயின் சம்பளமானது 250 கோடி பெற்றதாக செய்தி சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்த கட்டமாக முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த போகிறார். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார் மேலும் அவருடைய கட்சி தமிழக வெற்றிக்கழகம் மிக தீவிரமான முறையில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.