நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். செல்லமே படத்தை தொடர்ந்து திமிர், சண்டக்கோழி , அவன் இவன் தாமிரபரணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சில நாட்களாகவே விஷால் மற்றும் லக்ஷ்மி மேனனை பற்றிய காதல் கதைகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது. இதைத்தொடர்ந்து இந்த செய்திக்கு பதில் அளித்த நடிகர் விஷால் இந்த செய்திக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை மேலும் இது போன்ற வதந்திகளை பரப்புவதை நான் கண்டு கொள்வதும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் எனக்கும் லட்சுமிமேனனுக்கும் திருமணம் என்று சொல்வதை நான் முற்றிலும் மறுக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நான் இந்த விளக்கம் கொடுப்பதற்கு முதல் காரணம் இந்த செய்தியில் சம்பந்தப்பட்டிருப்பது ஒரு நடிகை என்பதை விட அவர் ஒரு பெண் என்பதற்காக மட்டுமே மேலும் இது போன்ற வதந்தியின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். தயவு செய்து யாருடைய வாழ்க்கையிலும் நுழைந்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் விஷால் கேட்டுக் கொண்டார்.