இந்த உலகில் மனிதராய் பிறந்த அனைவருக்கும் திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய கனவாக இருக்கும். அந்த திருமணம் சில காரணங்களால் நம் வாழ்க்கையில் சற்று தள்ளி போகலாம் அதற்காக மன உளைச்சலுக்கு ஆளாக தேவையில்லை ஆன்மீகத்தில் திருமண தடையை நீக்குவதற்கு பல எளிய முறையில் பரிகாரங்கள் உள்ளது. கடவுளுக்கு இதுபோன்ற சில பரிகாரங்களை செய்து வருவதால் திருமண தடை என்பது மிக எளிதாக நீங்கிவிடும்.
திருமண தடையை நீக்குவதற்கு துர்க்கை அம்மன் முதன்மை கடவுளாக விளங்கி வருகிறது. இந்த துக்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல் ஒரு ஊதுபத்தியை கொண்டு நல்லெண்ணையில் விளக்கேற்றி வந்தால் நிச்சயம் திருமண தடை என்பது விலகும்.