துளசி செடி என்பது தெய்வத்திற்கு உரிய ஒரு பிரசாதமாக இந்து மதத்தில் நம்பப்பட்டு வருகிறது. துளசி செடியை பூஜை அறையில் வைத்து மகாலட்சுமிக்கு இணையாக வணங்கி வருகிறார்கள். துளசி செடியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று இதனால் வரை நம்பப்பட்ட வருகிறது. பல செல்வங்களை அள்ளித் தரும் செல்வகலாச்சியமாக துளசி செடி வணங்கப்பட்டு வருகிறது.
கோவில்களில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் நம் உடல் ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்கும் கடவுளின் வரப்பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துளசி பூஜை செய்து வருவதன் மூலம் எட்டு வகையான செல்வங்கள் நம் பெறலாம் என்பது ஐதீகம்.