பத்து ரூபாய் நாணயம் செல்லுமா…? செல்லாதா..? என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து சில அறிவிப்பை வெளியிட்டனர். அந்த அறிவிப்பில் பத்து ரூபாய் நாணயம் சட்டபூர்வமானது என்றும். தினசரி பரிவர்த்தனைக்கு பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான அனுமதி பெற்றுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இறந்த போதிலும் பலருக்கும் ரூ.10 ரூபாய் நாணயம் செல்லுமா என்ற சந்தேகம் இன்று வரை ஏற்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் பத்து ரூபாய் நாணயம் மிக வெகுவாகவே குறைந்து காணப்படுகிறது. மக்களுக்கு ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து தெளிவான தகவலை வெளியிட்டுள்ளனர்.