தற்பொழுது இந்தியாவில் வங்கி கணக்கு தொடங்குவது முதல் ஓட்டுனர் உரிமம் பெறுவது என அனைத்து துறைகளுக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாளமாக ஆதார் கார்டு கருதப்படுகிறது. எனவே எந்த பயன்பாட்டிற்கும் ஆதார் கார்டு பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
தற்பொழுது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சில தகவலை வெளியிட்டுள்ளது ஆதார் அட்டை காலாவதி ஆனவர்கள் மற்றும் ஆதார் கார்டு ஏதேனும் பிழை இருப்பவர்கள் உடனடியாக KYC பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் நீண்ட நாட்களாகவே புதுப்பிக்கப்படாமல் இருப்பவர்கள் இந்தியாவில் அதிக அளவு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே அதுபோன்ற ஆதார் கார்டு KYC செய்யப்படாமல் இருப்பதால் முடக்கும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் ஆதார் சேவா கேத்ராவின் பொறுப்பாளர் நிஷீ சுக்லா தகவலை வெளியிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவில் 60% பேர் ஆதார் கார்டில் KYC செய்யப்படாமல் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆதார் கார்டை ஒரு முறையாவது ஏதாவது ஒரு காரணங்களால் திருத்திருக்க வேண்டும் என்றும் 8 வயதுக்கு மேற்பட்டவருக்கு கட்டாயம் KYC செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது. மக்கள் அனைவரும் விரைவாகவே அவர்களின் ஆதார் கார்டை KYC செய்ய வேண்டும் என்றும் இதற்காக UIDAI சேவை மையம் உள்ளதாகவும் அதற்காக கட்டடம் ரூ. 50 வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.