கனவு காணுங்கள் ஆனால் கனவு
என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை
தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே
இலட்சிய கனவு -அப்துல்கலாம்
அப்துல்கலாம் அவர்களின் 8ஆவது நினைவுநாள்.அவர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டு இருந்தார்.இவர் ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர்.எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை பெற்றவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்,இஸ்ரோ,இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சியில் மையம் ஆகியவற்றின் தலைமை வின்ஞ்ஞானியாக இருந்து ஏவுகணை தயாரிப்பதில் இவர் வல்லவர்.இவரை அனைவரும் ஏவுகணை நாயகன் என்று கூறுவார்கள்.
அவர் 11ஆவது குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின்னரும் குழந்தைகளுக்கு,மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றி கொண்டு இருப்பார்.2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங் பகுதியில் மாணவர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் உயிரிழந்தார்.
அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.இன்று காலை சிறப்பு பிரத்தனை நடந்தது.இதில் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், மகன் ஜெயுலாதீன், மருமகன் நிஜாமுதீன், பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிரா எம்.எல்.ஏ. கீதா ஜெயின், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் வேலூர் இப்ராகிம் ஆகியோரும் பங்கேற்றனர். அரசு சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்றனர்.அவரது 8ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்துல்கலாமின் நினைவிடம் மணிமண்டபத்தின் வெளி பகுதியில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.