8 மாத கைக்குழந்தையை விற்று ஐ போன் 14 வாங்கிய தம்பதிகள் ரீல்ஸ் மோகத்தால் நடந்த கொடூர சம்பவம். மேற்கு வங்க மாநிலம் பர்கணஸ் இந்த மாநிலத்தில் ஜெய்தேவ் மற்றும் அவரது மனைவி வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஏழு வயது ஒரு பெண் குழந்தையும், தற்போது பிறந்து 8 மாதமே ஆன ஒரு கைக்குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவருமே இன்ஸ்டாகிராமில் அதிக நேரத்தை செலவிட்டு ரீல்ஸ் போடுவது வழக்கம்.
இவர்கள் ரீல்ஸ் போடுவதை வழக்கமாக வைத்தவர்கள், அந்த சமயத்தில் ஐபோனில் ரீல்ஸ் போட வேண்டும் என்று நினைத்துள்ளார்கள். இந்த ரீல்ஸ் மோகத்தால் தனது எட்டு மாத கைக் குழந்தையை விற்று அதில் வந்த பணத்தை வைத்து ஐபோன் 14 வாங்கியுள்ளார்கள்.பின்னர் அந்த ஐபோனில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் இவர்களின் குழந்தை சில நாட்கள் காணவில்லை என்று எண்ணி அவர்கள் புது ஐபோனையும் அதில் வீடியோ பதிவிட்டதையும் பார்த்து சந்தேகம் அடைந்தவர்கள் போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சம்பவம் அறிந்த போலீசார் இந்த தம்பதியினரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒப்புக்கொண்டனர் குழந்தையை விற்று தான் ஐபோன் வாங்கினேன் என்பதை. இதில் குழந்தையை விற்று ஐபோன் வாங்கியது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அடுத்ததாக தனது ஏழு வயதான பெண் குழந்தையை விற்க இருந்தது இந்த விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தாய் சக்தியை போலீசார் கைது செய்துள்ளனர். எட்டு மாத குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய பிரியங்கா கோச் என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர் போலீசார். தற்போது தலைநகராக இருக்கும் கணவர் ஜெய் தேவை தேடி வருகின்றனர். குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய இந்த சம்பவம் அந்தப் பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.