இந்தியாவில் வங்கிகளில் 5 நாட்கள் வேலை மற்றும் 2 நாட்கள் விடுமுறைக்கு நிதி அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதனால் தினசரி வேலை நேரத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது என்றும் கூர்யுள்ளனர்.தற்போது, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒப்புதல் கிடைத்த பிறகு, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
இந்த ஏற்பாட்டின் கீழ், 8 மணி நேரத்திற்கு பதிலாக, ஊழியர்கள் தினமும் சுமார் 9 மணி நேரம் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு வாரத்தில் 5 வேலை நாட்களை அறிவிப்பது தொடர்பாக, ஜூலை 28 அன்று நடைபெற்ற இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டத்தில் இந்த முன்மொழிவு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.வங்கித் துறையிலும் இதே முறையை அமல்படுத்த வேண்டும் என்ற வங்கி அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனர்.
மெட்ரோ நகரங்களில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்கேற்ப 5 நாட்கள் வேலை நாட்கள், 2 நாட்கள் விடுமுறை என்ற முறை ஊழியர்களுக்கு பொருந்தும். இந்த ஏற்பாட்டின் கீழ், 8 மணி நேரத்திற்கு பதிலாக, ஊழியர்கள் தினமும் சுமார் 9 மணி நேரம் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 2021ல் வங்கி ஊழியர்களின் மொத்த வேலை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பண பரிவர்த்தனையுடன் ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் அதிகரிக்கலாம் என்று கூறியிருந்தது.பணமில்லா பரிவர்த்தனைகள் 40 நிமிடங்கள் அதிகரிக்கும் நேரத்தில் செய்யப்படும் என்றும் அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
அதேசமயம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை என்றும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிப் வேலைநாள் என்றும் 5 நாட்கள் விடுமுறைக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை என்று கூறப்பட்டுள்ளது.