பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்த நோக்கத்தில் 9 வயது முதல் 14 வயது வரை உடைய சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. மேலும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் உரையின் போது மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு சுகாதார துறைகளுடன் மத்திய அரசு இந்த திட்டத்தை பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
மேலும் மத்திய அரசின் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைப் பற்றிய ஆலோசனை 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் உரையின் போது செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இந்தியாவில் ஆண்டுக்கு 80 ஆயிரம் பெண்களுக்கு கருப்பை வாய் போற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.