இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அச்சுறுத்தும் இந்த கொரோனா வைரஸ் இன்று ஒரே நாளில் 290 பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக நாடு முழுவதும் ஜேஎன்1 வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. உருமாறிய இந்த புதிய வகை வைரஸ் காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பரவும் நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சத்து 23 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 88 ஆயிரத்து 258 பேர் குணமடைந்துள்ளதாகவும் அறிக்கை வெளியாகி உள்ளது. இன்று கொரோனா தொற்றினால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்றினால் சிகிச்சை பெறுவோறின் எண்ணிக்கை 2000 அவளுங்களா இதுதான் கடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கொரோனா தொற்றினால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் வெளியில் செல்லும் பொழுது முக கவசம் அணிவது அவசியம் என்றும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.