சில மாதங்களாகவே புதிய வகை கொரோனா தொற்றின் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. ஜேஎன்.1 வகை கொரோனா தொற்றின் தாக்கமானது சமீப சில நாட்களாகவே இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை கொரோனா தொற்று நோய் தடுப்பாற்றலை ஊடுருவும் தன்மை கொண்டது.
டிசம்பர் மாதம் முதல் இந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த புதிய வகை கொரோனா தொற்றின் எண்ணிக்கை தற்பொழுது பல மடங்காக அதிகரித்துள்ளது. குளிர் காலம் ஆரம்பத்திலிருந்து புதிய வகை கொரோனா தொற்றின் தாக்கம் ஆனது பல்வேறு நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 157 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,496 ஆக அதிகரித்துள்ளதாக மதிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்றைய நிலவரப்படி சத்தீஸ்கரில் ஒருவரும், உத்திர பிரதேசத்தில் ஒருவரும் உயிரிழந்து உள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
புதிய வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிலை நிலவுவதாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்து சிகிச்சை எடுப்போரில் 92 சதவீதம் பேர் குணம் பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.