இந்தியாவில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் .
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதி ஆண்டிலிருந்து கொரோனா தொற்று உலகில் பரவிவருகிறது . கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டது . ஆனாலும் கொரோனா உருமாறிக் கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருந்து வருகிறது .
கொரோனா வைரஸில் இருந்து டெல்டா , பின்னர் ஒமேகாண் என புதிதாக உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது . சில காலமாகத்தான் கொரோனாவில் பாதிப்பு குறைந்தது . ஆனால் தற்போது கலந்த சில வாரங்களாகவே கேரளா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது . இதனால் அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரையில் 21 பேருக்கு புதிய வகை கொரோனாவான கே .என் .1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
மேலும் புதியவாகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள அனைவரும் தயார் நிலையில் இருப்பதும் அவசியம் என்றும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மத்திய மற்றும் மாநில அளவில் முறையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி மாண்டவியா தெரிவித்துள்ளார் .