உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் இலட்சக்கணக்கான மனிதர்களும் உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நாடுகளும் பல முயற்சியை எடுத்து வந்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சேர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியை உருவாக்கினர்.
இந்த தடுப்பூசியானது இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தைச் சேர்ந்த ஜேமி ஸ்காட் என்பவர் இந்த கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துபவர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவதாக கூறி கோர்ட்டில் வழக்கை தொடர்ந்தார்.
இவரை தொடர்ந்து 51 வழக்குகள் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று வரை விசாரணையில் உள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கை குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர். இருந்த போதிலும் மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இது போன்று நடக்க வாய்ப்பிருப்பதாகவும் பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோர்ட்டில் அளித்த ஆவணத்தில் தெரிவித்துள்ளது.