வங்க கடலில் உருவாகி இருக்கும் டானா புயல் ஒடிசாவில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஒடிசாவை புரட்டிப் போட்ட பைலின் புயல் மக்களின் நினைவுக்கு வருகிறது
டானா புயல் காரணமாக கடலோர மக்கள் தற்பொழுது வெளியேறி வருகின்றனர். மேலும் இந்த புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்று மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 2013 – ஆம் ஆண்டு ஒடிசாவை புரட்டி போட்ட பைலின் புயல் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது இதன் காரணமாக ஒடிசா தலைகீழாக மாறியது.
டானா புயல் கரையை கடப்பதை தொடர்ந்து ஒடிசாவில் உள்ள மக்கள் முகாம்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது டானா புயல் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதை தொடர்ந்து புயலாக உருவெடுத்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் இருந்து சுமார் 560 கி.மீ தொலைவில் தற்பொழுது நிலை கொண்டுள்ளது. இந்த புயல் ஆனது வருகின்ற வியாழக்கிழமை அக்டோபர் 24 – ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகின்ற அக்டோபர் 25 – ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என்றும் கரையை கடக்கும் பொழுது காற்றின் வேகம் 100 முதல் 120 கி. மீ வேகத்தில் வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது.