வங்கதேசத்தில் ஒரே நாளில் 2,292பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுகாதார சேவைகளுக்கான பொது இயக்கு நரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2 292 பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளதாக தெரிவித்துள்ளது, இதில் 1064 பேர் டாக்கா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் மற்றவர்கள் வேறு வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் இன்றி இந்த டெங்கு பாதிப்புக்கு சுமார் 9 பேர் இதுவரையில் உயிரிழந்து உள்ளனர் மொத்தமாக உயிரிழப்பின் எண்ணிக்கை 176 ஆக உள்ளது என்றும் வங்கதேசத்தில் மட்டும் மொத்தமாக 7,175 டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரையில் 4,149 பேர் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். 21 நாட்களில் 109 பேர் உயிரிழந்தும் 20 ஆயிரத்து 465 பேர் டெங்கு உறுதி செய்யப்பட்டும் உள்ளது வருகின்ற ஆகஸ்ட் மட்டும் செப்டம்பரில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.
நடப்பு ஆண்டில் இதுவரை 32,977 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டனர். 25 ஆயிரத்து 626 பேர் அதில் குணமடைந்துள்ளனர்.2019 ஆம் ஆண்டில் 179 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது, ஜூலை இந்த பாதிப்பு மோசமான அடைந்துள்ளது என்று கூறினர்.