நாடு முழுவதும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை கடந்த ஆண்டிலேயே அமலுக்கு வந்த நிலையில் கடந்த ஆண்டு பிரீ கேஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை மத்திய அரசு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வது அதன் பின் அந்த பாடத்திட்டங்கள் நடைமுறைக்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடும் மத்திய அரசு விதித்தது.
தற்பொழுது மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை தமிழகம் உட்பட சில மாநிலங்களில் அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் இந்த புதிய கல்விக் கொள்கை வருகின்ற 2024 – 25 -ம் கல்வியாண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் புதிய மாணவர் சேர்க்கை சில பள்ளிகளில் தற்பொழுது தொடங்கியுள்ளது.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு முக்கிய சுற்று அறிக்கையை தற்பொழுது அனுப்பியுள்ளது அந்த அறிக்கையில் பிரீகேஜி படிப்பதற்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்றும் எல்கேஜி படிப்பதற்கு நான்கு வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் மேலும் யூகேஜி படிப்பதற்கும் ஐந்து வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்றும் அந்த சுற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 1 – ம் வகுப்பு சேர வேண்டும் எனில் மாணவர்களுக்கு முழுமையாக ஆறு வயது நிரம்பியிருக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகின்ற கல்வியை ஆண்டில் இன்னும் பல கல்வி கொள்கைகள் மத்திய அரசு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.