பொதுவாகவே தங்கம் விலையில் ஏற்றும் இறக்கம் காணப்படுவது சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டுதன். அந்த வகையில் தமிழ்நாட்டில் தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை எப்பொழுதுமே சிறப்பாக நடைபெற்று வரும்.
சராசரியாக தமிழ்நாட்டில் தங்கத்தில் பெரும்பாலான மக்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருவது வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக தங்கம் ஏற்று இரக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில். இன்று ஒரே நாளில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
இதை தொடர்ந்து 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 7,525 – க்கும் ஒரு சவரன் ரூ. 60,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வருகின்ற நாட்களில் மேலும் தங்கம் விலை அதிகரிக்க கூடும் என்று மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டு வருகிறது.
வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கடந்த 4 நாட்களாக ஒரே விலையில் நீடித்து வருகிறது. அதை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் ரூ. 103.90 – க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,03,900- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்தை கடந்த நிலையில் நகைப் பிரியர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.