தமிழக அரசானது அரசு பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையிலும் சில அறிவிப்புகளை மாணவர்களுக்கு அளித்துள்ளது.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வரும் மாணவர்கள் அவர்களின் விருப்பம் போல் இந்தியாவில் செயல்படக்கூடிய தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பெற அவர்களுக்கு உண்டான செலவுகள் அனைத்தையும் அரசே முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதைப் பற்றி அறிவித்ததை அடுத்து உடனடியாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது வெளிநாட்டில் உயர் கல்வி பயில விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் ஆர்வத்தை பாராட்டி முதல் முறை செல்லும் பயண தொகையை முழுவதுமே அரசே ஏற்றுக்கொள்ளவிருக்கிறது. என்ற உறுதியும் அளிக்கப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவிற்காக திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் ஆறு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உயர்கல்வி குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிவு வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது மற்றொரு முக்கியமான அரசாணை இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அரசு பள்ளி மாணவர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து நம் நாட்டில் இயங்கி வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரக்கூடிய மாணவர்களின் அனைத்து கல்விச் செலவினையும் முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும்.
இத்திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவதற்காக ஆண்டுதோறும் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு அரசு பள்ளி மாணவர்கள் உலகம் போற்றும் அறிஞர்களாக விளங்க. இது போன்ற மாதிரியான புதிய திட்டங்கள் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த அறிக்கை குறித்து முதலமைச்சருக்கு மாணவர்கள்,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என அறிவித்துள்ளார்.