பொதுவாகவே இளைஞர்கள் சுற்றுலா செல்ல வேண்டும் என்று திட்டமிட்டாலே கோவாவுக்கு தான் செல்வார்கள் இதை தொடர்ந்து கர்நாடகா அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்பொழுது சுற்றுலா பயணிகள் அதிகரிப்பதை தொடர்ந்து மது விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
கோவாவில் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் அதிக அளவு கடற்கரையில் செலவழிப்பதை தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. அதிக மின்விளக்குகள் பொருத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடற்கரை அருகில் டென்ட் அமைக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளை தீவிர படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த கர்நாடகா அரசு ஆலோசித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.