புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட இருப்பதாக புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி போக்குவரத்துக்காக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஒப்பந்த ஓட்டுனர்களின் மாத ஊதியமானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ரூ. 10,804 – லிருந்து ரூ. 16.796 ஆகவும் ஒப்பந்த நடத்துனரின் மாதம் ஊதியமானது ரூ. 10,656 – லிருந்து ரூ. 16.585 – ஆகவும் பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பானது போக்குவரத்து கழக ஒப்பந்தர் நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊதிய உயர்வானது கடந்த மாத ஊதியத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிப்பு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.