உயர் நீதிமன்றத்தில் இருந்து வந்த சுற்றறிக்கையின் எதிரோயாக பல இடங்களில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அந்த சுற்றறிக்கையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் சிலையை மட்டுமே வைத்திருக்கவேண்டும் என்றும் மட்டற்ற தலைவர்களின் சிலையை வைக்க கூடாது என்றும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.இதை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் பதிவாளர் சுற்றிக்கை மூலமாக அறிவித்தது .
அதுமட்டுமின்றி சென்னையில் புதிதாக ஆலந்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்றத்தில் உள்ள அம்பேத்கர் புகைப்படத்தை நீக்க சொல்லி இருந்தது. இதைதொடர்ந்து பல மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் உருவபடத்தை வைக்கநீதிமன்றத்தில் அனுமதி இல்லை என்று கூறுவது தவறு என்று பல அரசியல் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.இதைதொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படகூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் (Status Quo to be continued) எனத் தெரிவித்துள்ளார்.