வேதனைகளும் சாதனைகளாய் மாறும்,விடா முயற்சி என்னும் விதை இருந்தால்……! என்றார் பாரதியார்.தளர்ச்சி இல்லா முயற்சி ஒரு பயிற்சி. முயன்றால் முடியாதது இவ்வுலகில் ஒன்றுமில்லை.தோல்வி எனும் தடையைத் தாண்டி வெற்றிக் கனியை பறிக்க முயற்சியே முதல் ஆயுதம் ஆகும். முயற்சி உடையவன் தன்னுடைய குறிக்கோளை நோக்கிய பாதையில் எவ்வாறான இடர்கள் வந்தாலும் அதிலிருந்து விலக மாட்டான்.நாம் சில முறை தோர்த்தாலே நாம் முயற்சி செய்வதை நிறுத்திவிடுவோம்.
ஒருவர்தான் அரியானாவை சேர்ந்த விஜய் வர்தன். இவர் அரியானாவின் சிர்சாவில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து முடித்தார்.பின்னர் இந்திய நிர்வாக சேவைகளுக்கான போட்டி தேர்வான யூ.பி.எஸ்.சி. தேர்வை எழுத விரும்பினார்.
கடினமான தேர்வான அதற்கு தயாராவதற்காக டெல்லி சென்றுள்ளார்.அவர் சுமார் 35 முறை பல அரசாங்க வேலைகளுக்கான தேர்வுகளை எழுதினார். ஆனால் அவற்றில் தோல்வியையே கண்டுள்ளார்.ஆனாலும் மனம் தளராமல்.மீண்டும் முயன்று யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதி 2018ம் வருடம் 104வது இடத்தை பிடித்து வெற்றி கண்டு ஐபிஎஸ் அதிகாரியானார்.
பின்னர் மீண்டும் தேர்வை எழுதி 2021ல் தேர்ச்சி பெற்று, தற்போது ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றுகிறார்.”எப்போதும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்” என்பதுதான் இளைஞர்களுக்கு விஜய் வர்தன் கூறுகிறார்.